நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரம், கீரம்பூர் பகுதிகளில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவர் ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகளில் ரூ.4.78 கோடி மதிப்பீட்டில் எர்ணாபுரம் இருட்டணை முதல் நல்லாகவுண்டம்பாளையம் கீரம்பூர் வரையிலான தார்சாலை அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது நடைபெற்று வரும் பணியின் நிலை, முன்னேற்றம் உள்ளிட்ட விவரங்களை அலுவலரிடம் கேட்டறிந்தார். மேலும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணியினை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) தமிழ் அன்பன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.