வேளாண்மை திட்ட பணிகள் ஆய்வு

வேளாண்மை திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

Update: 2022-11-11 14:57 GMT

பரமக்குடி, 

பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் ஊடுபயிர் சாகுபடி உளுந்து செயல் விளக்க திடல் 10 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளது. அதை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் பாஸ்கர மணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் எட்டி வயல் கிராமத்தில் கலைஞர் திட்ட தொகுப்பு திடலில் காட்டு கருவேல் மற்றும் புதர் செடிகளை அகற்றி தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் தேர்வு செய்து குதிரைவாலி விதை, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் வழங்கப்பட்ட புகழ்காந்தி மற்றும் ஞானமூர்த்தி விவசாயிகளின் வயலில் ஆய்வு செய்தார். பின்னர் உணவு தானிய உற்பத்தி இலக்கினை அடைய விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

ஆய்வின் போது மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் தர கட்டுப்பாடு நாகராஜன், சத்திரக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் கண்ணன், பரிமளா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்