சாலை மேம்பாட்டு பணிகளை அதிகாரி ஆய்வு

சாலை மேம்பாட்டு பணிகளை அதிகாரி ஆய்வு;

Update:2022-11-08 00:15 IST

பரமத்திவேலூர்:

நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்குட்பட்ட நாமக்கல் உட்கோட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2021-2022-ன் கீழ் சாலைகள் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி பரமத்திவேலூர் தாலுகா சித்தாளந்தூர் முதல் ஜேடர்பாளையம் வரை மற்றும் ஜேடர்பாளையத்தில் இருந்து பரமத்தி வரையிலும் சாலைகளை அகலப்படுத்தும் பணிகளை சேலம் நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது சாலையின் அகலம், அடர்த்தி மற்றும் சாலையின் கேம்பர் ஆகியவற்றை பார்வையிட்ட அவர் பணி விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது நாமக்கல் நெடுஞ்சாலை துறை தரக்கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் சோமேஸ்வரி, தரக்கட்டுப்பாடு உதவி பொறியாளர் அருண் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்