சேலம் சுகவனேசுவரர் கோவிலில்சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. திடீர் ஆய்வு

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. தினகரன் திடீரென ஆய்வு செய்தார்.

Update: 2023-10-14 20:35 GMT

சேலம்

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. தினகரன் திடீரென ஆய்வு செய்தார்.

சுகவனேசுவரர் கோவில்

சேலம் டவுனில் பிரசித்திப்பெற்ற சுகவனேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று காலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. தினகரன் வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்த அவர் கோவில் முழுவதும் சுற்றி வந்து திடீரென ஆய்வு செய்தார். இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மைய அறைக்கு சென்றார்.

இதையடுத்து ஐ.ஜி. தினகரன் அங்கு எத்தனை சிலைகள் உள்ளது?, பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார். இதையடுத்து அங்கிருந்த கோப்பில் ஐ.ஜி. தினகரன் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

138 சிலைகள்

இந்த ஆய்வு குறித்து அதிகாரிகள் கூறும் போது, தமிழகம் முழுவதும் கோவில்களில் உள்ள சிலைகள் பாதுகாப்பு அறையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. தினகரன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று சேலம் சுகவனேசுவரர் கோவிலில் ஆய்வு நடத்தினார்.

இங்குள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மைய அறையில் சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு இல்லாத 18 கோவில்களில் உள்ள 134 சிலைகள், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 4 சிலைகள் என மொத்தம் 138 சிலைகள் உள்ளன. அவற்றை ஐ.ஜி. ஆய்வு செய்தார் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்