அரசு பள்ளியில் தவறி விழுந்த பிளஸ்-2 மாணவர் காயம்

தர்மபுரியில் அரசு பள்ளியில் தவறி விழுந்த பிளஸ்-2 மாணவர் காயம் அடைந்தான்.

Update: 2022-07-30 17:03 GMT

தர்மபுரி மாவட்டம் ஜருகு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவர் தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் வாந்தி வந்ததால் அந்த மாணவர் வகுப்பறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முதல் மாடியில் உள்ள படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து காலில் காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவர்கள் மாணவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்