ஊத்தங்கரை அருேக, காரப்பட்டு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்

Update: 2023-08-08 19:45 GMT

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் உஷாராணி குமரேசன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஞானப்பண்டிதன் வரவேற்றார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மூன்றம்பட்டி குமரேசன், ரஜினிசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். விழாவில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் கதிரவன், துணை செயலாளர் சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி தலைவர் அமானுல்லா, நகர அவைத்தலைவர் தணிகை குமரன், நகர செயலாளர் பாபு சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலீல், ஜெயமணி திருப்பதி, சின்னத்தாய், அகமத் பாஷா, ராஜாமணி அருணகிரி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் ஊத்தங்கரை ஆண்கள் மற்றும் பெண்கள், கல்லாவி, கீழ்குப்பம், மிட்டப்பள்ளி, பெரிய தள்ளப்பாடி, அத்திப்பாடி, சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்