மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
ஜாலிப்புதூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை கோவிந்தசாமி எம்.எல்.ஏ. வழங்கினார்.
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட ஜாலிப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி 141 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு மையத்தில் ஆய்வு செய்து உணவின் தரம் குறித்து சோதனை நடத்தினார். மாணவ, மாணவிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்று சத்துணவு ஊழியர்களுக்கு எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பூங்கொடி சேகர், தலைமை ஆசிரியர் கவுதம், ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், முருகன், சேகர், ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா தேவராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் சக்திவேல், முருகேசன், சூடாமணி, முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.