மாணவர்கள் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்

மாணவர்கள் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி பானுபிரதாப் சிங் வர்மா கூறினார்.

Update: 2022-09-25 18:45 GMT

காரைக்குடி, 

மாணவர்கள் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி பானுபிரதாப் சிங் வர்மா கூறினார்.

தனித்திறன்கள்

காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ ராஜ ராஜன் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் 7-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஸ்ரீ ராஜ ராஜன் கல்விக்குழுமத்தின் ஆலோசகரும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் சுப்பையா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மத்திய தொழில் துறை இணை மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 275 இளங்கலைப் பட்டங்களும், 22 முதுகலை பட்டங்களும் வழங்க பட்டன.

பின்னர் மத்திய மத்திய மந்திரி பேசியதாவது:- மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் போதாது, தனித்திறன்களை வளர்த்து கொள்ளவேண்டும். நம் நாட்டு மாணவர்கள் படிப்பினை முடித்துவிட்டு பல நாடுகளில் புகழ்வாய்ந்த பதவிகளில் இருந்து வருகிறார்கள். காரணம் நமது கல்விமுறையாகும்.

இந்த கல்லூரியில் முழு அளவிலான தகுதி பெற்ற என்ஜினீயர்கள் உருவாகி வருவது அவர்களது திறமைகளிலிருந்து கண்டறியமுடிகிறது. மாணவர்களின் திறமை மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு கூறினார்.

பாராட்டு

பின்னர் கல்லூரி மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ள ரோபாடிக்ஸ் லேப் மற்றும் இ-பைக், சோலார்-பைக் (மின்சாரம் மூலம் இயங்கும் மோட்டார் சைக்கிள், சூரியஒளி சக்தி மூலம் இயங்கும் மோட்டார் சைக்கிள்) ஆகியவற்றை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார்.

மத்திய அரசின் கயிறு வாரிய தலைவர் குப்புராமு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எச்.ராஜா, அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் குணசேகரன், ஸ்ரீ ராஜ ராஜன் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் மயில்வாகனன், துணை முதல்வர் மகாலிங்க சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் வடிவாம்பாள் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்