இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்
காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் நடந்தது.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், மத்திய அரசு கொண்டுவர உள்ள பொது சிவில் சட்டத்தை எதிர்த்தும், மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர தலைவர் எம்.எஸ்.நூஹகு சாகிப் தலைமை தாங்கினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.சாலீக் கிராத் ஓதினார். நகர செயலாளர் அபூசாலீக் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர்கள் பாதுல் அஸ்ஹாப், முகமது ஹசன், ஷாகுல், ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடையநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முகமது அபூபக்கர் தொடக்க உரையாற்றினார். திராவிடர் கழக பிரசார அணி மாநில செயலாளர் வக்கீல் அருள்மொழி, தமிழ் மைய அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர்ராஜ், கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி அமைப்பாளர் பி.கே.பெரோஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில இணை செயலாளர் இப்ராகிம் மக்கி, மாவட்ட தலைவர் மீரா சாகிப், மாவட்ட பொருளாளர் மீராசா, மாவட்ட கவுரவ செயலாளர் சம்சுதீன், தேசிய கவுன்சில் உறுப்பினர் ஹசன் ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மன்ற உறுப்பினர் மும்தாஜ், கயத்தாறு நகர பஞ்சாயத்து உறுப்பினர் செய்யது அலி பாத்திமா, தெற்கு ஆத்தூர் செய்யது அப்பாஸ், வடக்கு ஆத்தூர் சாகுல் ஹமீது, குரும்பூர் ஷேக் பரீத், சாத்தான்குளம் மீராசாகிப் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் என்.டி.முகமது இஸ்மாயில் புகாரி நன்றி கூறினார்.