கர்நாடக சங்கீதம் இருந்தால் தான் பாரத கலாசாரம் காப்பாற்றப்படும்
கர்நாடக சங்கீதம் இருந்தால் தான் பாரத கலாசாரம் காப்பாற்றப்படும்
கர்நாடக சங்கீதம் இருந்தால் தான் பாரத கலாசாரம் காப்பாற்றப்படும் என திருவாரூரில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதன் கூறினார்.
நாதஸ்வர இசை நிகழ்ச்சி
திருவாரூரில் அவதரித்த சங்கீத மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர் ஆகியோரின் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 256-வது ஜெயந்தி விழாவையொட்டி திருவாரூர் புதுத்தெரு தியாகபிரம்மம் அவதார இல்லத்தில் சிறப்பு பூஜைகள், இசைக்கலைஞர்களின் இசை அஞ்சலி நடந்தது.
தொடர்ந்து கமலாம்பாள் சன்னதியில் சிறப்பு தவில் மற்றும் நாதஸ்வர இசை நிகழ்ச்சிகள் நடந்தது. நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் பங்கேற்ற பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணி முதல் பல்வேறு இசைக்கலைஞர்கள் கலந்து கொண்ட வீணை, மிருதங்கம், கஞ்சிரா வயலின் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் நடந்தது.
மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பங்கேற்பு
நேற்று மாலை நடந்த விழாவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதன் கலந்து கொண்டு பேசுகையில்,
இளம் வயதில் எம்.எஸ். சுப்புலட்சுமி, வீணை பாலச்சந்தர் ஆகியோரை பார்த்திருக்கிறேன். நான் திருவாரூரை சேர்ந்தவன். இந்த மண்ணில் பிறந்தவன்.
இந்த நாட்டின் கலாசாரம், பண்பாடு காப்பாற்றபட வேண்டுமெனில் இதுபோன்ற சங்கீத நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். கர்நாடக சங்கீதம் இருந்தால் தான் பாரத கலாசாரம் காப்பாற்றப்படும் என்றார்.
---