தூத்துக்குடி கல்லூரியில் சுதந்திர தின கருத்தரங்கம்
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் சுதந்திர தின கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்தியாவுக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திர தின சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்குக்கு வ.உ.சி கல்லூரி முதல்வர் வீரபாகு தலைமை தாங்கினார். காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்க கோட்டத் தலைவர் முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தார். இந்திய விடுதலையில் காயமற்ற கனவுகளும், வலி கொண்ட வெற்றிகளும் என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரான் பேசினார். நிகழ்ச்சியில் திரளான மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவுக்கான மக்கள் இயக்க செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.