கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற சுதந்திர தின ஊர்வலம்

கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற சுதந்திர தின ஊர்வலம் நடைபெற்றது.;

Update:2022-08-14 01:19 IST

கே.கே.நகர், ஆக.14-

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை - அறிவியல் கல்லூரியில் ஜெனிவா உடன்பாட்டு நாள் மற்றும் 75-வது சுதந்திர தின ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கணேசன், பெரியார் கல்லூரி முதல்வர் சுகந்தி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் தந்தை பெரியார் அரசு கல்லூரியில் தொடங்கி மன்னார் புரத்தில் நிறைவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை பெரியார் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலரும், திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர்ருமான குணசேகர் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்