சுதந்திர தினவிழா ஆலோசனை கூட்டம்
சுதந்திர தினவிழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது;
ஈரோட்டில் ஆண்டுதோறும் சுதந்திர தினவிழா ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்படும். இந்தநிலையில் விளையாட்டு மைதானத்தில் செயற்கையிழை ஓடு தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி ஆணைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். கூட்டத்தில் சுதந்திர தின விழாவில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.