சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுதந்்திர தினவிழா கொண்டாப்பட்டது.

Update: 2022-08-16 19:30 GMT

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுதந்திர தினவிழா கொண்டாப்பட்டது.

விவேகானந்தா பள்ளி

நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி சேர்மன் சேதுராமன் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் திருமாறன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஜேக்கப் துரைராஜ் வரவேற்றார். நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியேற்றினார். பள்ளி முதல்வர் முருகவேள் சுதந்திர தின சிறப்புரையாற்றினார். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

ஜாம்ஸ் மரைன் கல்லூரி

திசையன்விளை அருகே உள்ள பூச்சிக்காடு ஜாம்ஸ் மரைன் கல்லூரியில் தாளாளர் வி.எஸ்.கணேசன் தேசிய கொடியேற்றிவைத்தார். செயலாளர் எஸ்.ஜி.ராஜேஷ், கல்லூரி முதல்வர் கேப்டன் முரளி சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அதிகாரி பெனி, மக்கள்தொடர்பு அலுவலர் பிரேம் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். கல்வி ஆலோசகர் ஜேக்கப் செந்தில்குமார் நன்றி கூறினார்.

நெல்லை பொறியியல் கல்லூரி

மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் நடந்த விழாவுக்கு முதல்வர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கி தேசிய கொடியேற்றினார். நாட்டு நலப்பணி திட்ட துணை அலுவலர் பிரின்ஸ் வரவேற்றார். விழா ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முஜீப் முகம்மது முஸ்தபா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

பாலாஜி கல்வி நிறுவனம்

சேரன்மாதேவி ஸ்ரீ பாலாஜி கல்வி நிறுவனத்தில் சேரன்மாதேவி பஞ்சாயத்து தலைவர் தேவி அய்யப்பன் தேசிய கொடியேற்றினார். விழாவில் துணை தலைவர் மாரி, கல்லூரி தாளாளர் கமலா ராமச்சந்திரன், இயக்குனர் ரஞ்சித் ராமச்சந்திரன், செயலர் தினேஷ் ராமச்சந்திரன் மற்றும் பாலாஜி கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

சாரதா மகளிர் கல்லூரி

நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கணிப்பொறியியல் துறை பேராசிரியர் பாலமுருகன் தேசிய கொடியேற்றினார். கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். கல்லூரி செயலாளர் யதீஸ்வரி சரவணபவபிரியா அம்பா, சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் செயலர் யதீஸ்வரி தவப்ரியா அம்பா, கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி

மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் முகம்மது மீரா முகைதீன் தேசிய கொடியேற்றினார். முஸ்லிம் கல்வி கமிட்டி தலைவர் அப்துல்காதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நெல்லை மு.ந.அப்துர் ரஹ்மான் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் முகம்மது நாசர் தலைமையில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்