சுதந்திர தின விழா

மயிலாடுதுறை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-08-15 18:13 GMT

மயிலாடுதுறை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ராஜகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் அன்னை சொக்கலிங்கம், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் இளையபெருமாள், இமயநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ராமானுஜம் வரவேற்று பேசினார்.

இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ராம.சிதம்பரம் கலந்து கொண்டு சுதந்திர தின உரையாற்றினார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் நடந்த சமபந்தி நிகழ்ச்சியை எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகரசபை தலைவர் செல்வராஜ், கோவில் செயல் அலுவலர் ரம்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பாதயாத்திரை

மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் ராஜ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் 108 கிலோமீட்டர் பாதயாத்திரை கடந்த 14-ந் தேதி தில்லையாடி கிராமத்தில் தொடங்கப்பட்டு பல்வேறு ஊர்களின் வழியாக நேற்று சீர்காழியை வந்தடைந்தது. பாதயாத்திைர குழுவினரை மாநில பொதுச் செயலாளர் கனிவண்ணன், நகர தலைவர் லட்சுமணன் கொண்ட குழுவினர் வரவேற்றனர்.

பின்னர் கடைவீதியில் கொடியேற்றப்பட்டு கச்சேரி ரோடு வழியாக புதிய பஸ் நிலையம் எதிரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட தியாகிகள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிறைவாக புதிய பஸ் நிலையம் எதிரில் புதிதாக சீரமைக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் வட்டார தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்