மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 13,110 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,523 கன அடியிலிருந்து 13,110 கன அடியாக அதிகரித்து உள்ளது

Update: 2023-08-19 17:28 GMT

சேலம்,

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. இருப்பினும் அணையில் இருந்து பாசன தேவைக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

மழையளவு குறைந்த நிலையில், அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு, டெல்டா பாசன விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கும் அளவு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,523 கன அடியிலிருந்து 13,110 கன அடியாக அதிகரித்து உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.19 அடியிலிருந்து  54.40 அடியாகவும், நீர் இருப்பு - 20.69 டி.எம்.சி ஆக உள்ளது. மேட்டூர்  அணையில் இருந்து பாசனத்திற்காக 8,000கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்