களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது;

Update:2022-05-20 03:57 IST

களக்காடு:

களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

தலையணை

களக்காடு தலையணையில் கோடை காலம் தொடங்கியதும் வெயில் சுட்டெரித்தது. இதனால் கடும் வெப்பம் நிலவியது. இதைத்தொடர்ந்து தண்ணீர் வற்றி வந்தது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும், ஊர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக குவிந்து வருகின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் கார், வேன்களில் குவிந்து வருகின்றனர்.

தடை

தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் தடுப்பணை அருகே சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

ஆற்றில் இறங்கி குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளித்து வருகின்றனர். களக்காடு தலையணையில் சாரல் மழையின் காரணமாகவும், பள்ளி விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே மூடப்பட்டுள்ள கேண்டீனை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்