பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2022-07-16 18:28 GMT

ஈரோடு,

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 96 அடியை எட்டியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதனால் கொடிவேரி, கள்ளிப்பட்டி, நஞ்சை புளியம்பட்டி, அடரசபாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை மேய்க்கவோ வேண்டாம் என தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்