சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-09-01 13:00 GMT

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினாலும், மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் கட்டணம், பால் விலை போன்றவற்றின் உயர்வினாலும் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இன்று முதல் சுங்கச்சாவடிக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதும், சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது.

சுங்கச் சாவடிகள் எண்ணிக்கை குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பதில் அளித்த நெடுஞ்சாலைத்துறை மந்திரி அவர்கள், 2008 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளின்படி குறைந்தபட்சம் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்பதன். அடிப்படையில், தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் தான் நியாயமாக இருக்க வேண்டும் என்றும், இந்த விதியை மீறி பெரும்பாலான சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன.

தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவஷகளை மூட தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாகவும், இதில் முதற்கட்டமாக, பத்து கிலோ மீட்டர் சுற்றெல்லையில் உள்ள சுங்கச்சாவடிகளை உடனடியாக மூடும் திட்டத்தை மத்திய அரசிடம் தெரிவித்து விட்டதாகவும் தெரிவித்தார். இன்று இரண்டு ஆண்டுகள். கடந்த நிலையில், முன்பு இருந்ததைவிட சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கீழ்க்குப்பம், சிவகங்கை மாவட்டத்தில் கோடிகோட்டை, அரியலூர் மாவட்டத்தில் மணக்கேத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் தென்னம்மாதேவி மற்றும். கன்னியாகுமரி மாவட்டத்தில் திருப்பதிசாரம் ஆகிய இடங்களில் புதிதாக சுங்கச்சாவடிகள் துவங்கப்பட்டு இருப்பதாகவும், இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள. சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்து இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

சுங்கச்சாவடி வசூலில் ஈடுபடும் பல தனியார் நிறுவனங்கள் எவ்வித பராபரிப்புப் பணியையும் மேற்கொள்ளாமல், அடிப்படை வசதிகளையும் செய்து தராமல், திட்டக் காலத்தைத் தாண்டி வாகன உரிமையாளர்களிடமிருந்து சுங்கச் சாவடிக் கட்டணத்தை வசூலிக்கின்றன. காலம் கடந்து இயங்கும் சுங்கச்சாவடகளை உடனடியாக அகற்றவும், 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற முறையைப் பின்பற்றவும் தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.

இது மட்டுமல்லாமல், சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்துவதை நிறுத்த வேண்டும் என்று வாகன உரிமையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்பதாக தெரியவில்லை. மாறாக, சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்திக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் 20 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் வாகனத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் பாதிக்கப்படுவதோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பன்மடங்கு உயரக்கூடும்.

இந்தக் கட்டண உயர்வால் பாதிக்கப்படுவது ஏழை, எளிய மக்கள்தான். பொதுமக்கள் மற்றும் வாகன உரிமையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்யவும், சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை விதிகளுக்கு ஏற்ப குறைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்