கொப்பரை தேங்காய் வரத்து அதிகரிப்பு

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து உள்ளது.

Update: 2023-02-14 18:45 GMT


ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடைபெற்றது இதில் 75 விவசாயிகள் 581 மூட்டை கொப்பரையை பொது ஏலத்தில் விற்பனை செய்ய கொண்டு வந்தனர்.

காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி நடை பெற்றது.

இதில், தாராபுரம், காங்கேயம் மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் 318 மூட்டை முதல் ரக கொப்பரை ஒரு கிலோ 75 ரூபாய் 50 காசு முதல் 82 ரூபாய் 55 காசுக்கு ஏலம் ஏலம் போனது.

263 மூட்டை 2-ம் ரக கொப்பரை ஒரு கிலோ 57 ரூபாய் 40 காசு முதல் 72 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொப்பரை தேங்காய் கிலோவிற்கு 55 காசு குறைந்தது. தற்போது தேங்காய் பறிக்கும் சீசன் தொடங்கி உள்ளது.

இதனால் கொப்பரை தேங்காய் உற்பத்தி அதிகரித்து உள்ளது.

இதன் காரணமாக ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் 216 மூட்டை கொப்பரை அதிகமாக வந்து உள்ளதாக ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்