நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டுள்ளனர். மரவள்ளி கிழங்குகள் விளைந்தவுடன் அதனை வியாபாரிகள் வாங்கி கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புவர். ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்றது தற்போது ரூ.14 ஆயிரத்திற்கு விற்கிறது. கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்க பயன்படுத்தும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.14 ஆயிரத்திற்கு விற்றது தற்போது ரூ.15 ஆயிரத்திற்கு விற்கிறது. வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.