வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல உதவித்தொகை உயர்வு..!

வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல உதவித்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2022-06-06 13:20 GMT

சென்னை,

தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல உதவித்தொகை ஒரு லட்ச ரூபாயிலிருந்து 3 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்ப நல உதவித்தொகை ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில், தற்போது வழங்கப்பட்டு வரும் குடும்ப நல உதவித்தொகை ஒரு லட்ச ரூபாயிலிருந்து 3 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன் அடிப்படையில், வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினர்களாக பதிவு பெற்றுள்ள வணிகர்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு குடும்ப நல உதவித்தொகையானது 3 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

மேலும் தீ விபத்துகளில் பாதிக்கப்படும் வணிக நிறுவனங்களுக்கு இழப்பீட்டுத் தொகையானது 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தீ விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையிலிருந்து உரிய சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் வேறு எந்த நல வாரியத்திலும் பதிவு செய்து இழப்பீடுத் தொகை, நல உதவித் திட்டம் எதுவும் பெற்றிருத்தல் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்