பா.ம.க. நிர்வாகி தொழிற்சாலையில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

Update: 2023-01-06 18:45 GMT

ராசிபுரம்:

நாமகிரிப்பேட்டை அருகே பா.ம.க. நிர்வாகி தொழிற்சாலையில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை

நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஈஸ்வரமூர்த்தி பாளையத்தை சேர்ந்தவர் இ.கே.பெரியசாமி. இவர் நாமகிரிப்பேட்டை ஒன்றிய பா.ம.க. செயலாளராகவும், நாமகிரிப்பேட்டை ஒன்றிய குழு துணை தலைவராகவும் இருந்து வருகிறார்.

இவர் திம்மநாயக்கன்பட்டி அருகில் கோலியஸ் மூலிகை கிழங்கில் இருந்து பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு தயாரிக்கப்படும் கோலியஸ் மூலிகை கிழங்கு பவுடரை பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து வருகிறார்.

பரபரப்பு

இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இ.கே.பெரியசாமியின் தொழிற்சாலையில் கர்நாடகா மற்றும் சேலத்தை சேர்ந்த வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை நடந்தது. 2 நாட்களாக வருமான வரித்துறையினர் பா.ம.க நிர்வாகியின் தொழிற்சாலையில் சோதனையிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்