பிளஸ்-1 பொதுத்தேர்வு ெதாடங்கியது

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு ெதாடங்கியது.;

Update: 2023-03-14 18:45 GMT

ராமநாதபுரம், 

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் தொடங்கி உள்ளன.

வருகிற 5-ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த தேர்வினை ராமநாதபுரம் மாவட்டத்தில் 7,176 மாணவர்களும் 7,794 மாணவிகளும் ஆக மொத்தம் 14 ஆயிரத்து 970 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில் நேற்று நடைபெற்ற தமிழ் தேர்வில் 496 மாணவர்களும் 303 மாணவிகளுமாக மொத்தம் 799 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. 14,171 பேர் மட்டுமே தேர்வினை எழுதினர்.

தேர்வு நடைபெற்றதையொட்டி முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து மேற்பார்வையில் பறக்கும் படையினரும் கல்வித்துறை அதிகாரிகளும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்