தொடர் மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தொடர்மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

Update: 2023-05-04 19:32 GMT

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கான்சாபுரம் அத்தி கோவில் ஆறு, தாணிப்பாறையில் உள்ள நீரோடைகள், தலமலையான் கோவில் ஆறு உள்ளிட்ட ஆற்று பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் இப்பகுதிகளில் உள்ள சிறிய ஓடைகளிலும் தண்ணீர் செல்கிறது. பாப்பநத்தம் பெருமாள் கோவில் ஆறுகளில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்