கடலூா் மாவட்டத்தில் தொடர் மழை: 5 ஆயிரம் ஏக்கர் பயிர்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் 112 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்

கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் 5 ஆயிரம் ஏக்கர் பயிர்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் இந்த மழைக்கு 112 வீடுகள் சேதமடைந்துள்ளது.

Update: 2022-11-13 18:45 GMT

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று முன்தினம் சிதம்பரத்தில் ஒரே நாளில் 30 சென்டி மீட்டர் மழை பதிவானது. நேற்றும் மழை பெய்தது.

இந்த தொடர் மழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் 112 வீடுகள் இடிந்து விழுந்து சேதமானது. இதில் 88 குடிசை வீடுகள் பகுதியாகவும், 5 வீடுகள் முழுமையாகவும், 19 ஓடு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கி 3 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அந்தந்த பகுதி ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

9 கால்நடைகள் சாவு

இது தவிர 2 பசு மாடுகள், 5 ஆடுகள், 2 கன்றுக்குட்டிகள் என 9 கால்நடைகள் பலியாகி உள்ளன. 16 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. ஒரு இடத்தில் மரம் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நடத்திய கணக்கெடுப்பில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பயிர்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதில் சில இடங்களில் தண்ணீர் வடிந்து வருகிறது. சில இடங்களில் தண்ணீர் வடியாமல் உள்ளதால் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்