தொடர்மழையினால் நெற்பயிர்கள் சாய்ந்தன

வத்திராயிருப்பு அருகே தொடர்மழையினால் நெற்பயிர்கள் சாய்ந்தன.

Update: 2022-12-27 19:23 GMT

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு அருகே தொடர்மழையினால் நெற்பயிர்கள் சாய்ந்தன.

நெற்பயிர்கள் சாய்ந்தன

வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் சாரல்மழையினால் கான்சாபுரம் பகுதியில் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் சாய்ந்தன. இந்த பயிர்கள் மழைநீரில் மூழ்கி வீணாகி வருகிறது. சாய்ந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் நெல்லை சாகுபடி செய்துள்ளனர்.

விவசாயிகளுக்கு நிவாரணம்

தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் நெற்கதிர்கள் உள்ளன. இந்தசமயத்தில் இந்த பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் பயிர்கள் சாய தொடங்கி விட்டன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அந்த கடனை திரும்ப அடைக்க முடியாத நிலை உள்ளது.

மேலும் சாய்ந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட வயல்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டு்ம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்