வீரராகவபெருமாள் கோவில் திறப்பு

திருவெண்ணெய்நல்லூர் அருகே கடந்த 8 மாதங்களாக பூட்டி கிடந்த வீரராகவபெருமாள் கோவில் திறப்பு பக்தர்கள் மகிழ்ச்சி

Update: 2022-10-01 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த வீரராக பெருமாள் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் கடந்த 8 மாதமாக பூட்டியே கிடந்தது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்த பக்தர்கள் கோவிலை திறக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் வீரராகவபெருமாள் கோவிலை திறக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் முன்னிலையில் நேற்று கோவில் நடை திறக்கப்பட்டது. அதன் பிறகு இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் பரதன் மற்றும் கிராம மக்கள், இந்து முன்னணியினர் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து தரிசனம் செய்தனர். 8 மாதங்களாக பூட்டி கிடந்த கோவில் திறக்கப்பட்டதை அறிந்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்