நகர்மன்ற மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடந்தது.
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் நகர்மன்ற மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது. விழாவுக்கு தலைமையாசிரியை மேபெல்ராணி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். விழாவில் மாணவிகள் வண்ண பலூன்களை பறக்கவிட்டனர். ஏற்பாடுகளை கணித ஆசிரியர்களும், அறிவியல் ஆசிரியர்களும் செய்திருந்தனர். அனைத்து ஆசிரியர்களும் பங்குபெற்றனர்.