தூத்துக்குடியில் நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடம் திறப்பு

தூத்துக்குடியில் ரூ.28 லட்சத்தில் அமைக்கப்பட்டு உள்ள நகர்ப்புற நல வாழ்வு மைய கட்டிடத்தை அமைச்சர் கீதாஜீவன் நேற்று திறந்து வைத்தார்.

Update: 2022-07-04 15:34 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி ரூ.28 லட்சம் செலவில் கீழ அலங்காரதட்டு பகுதியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்னகரம் பகுதியில் சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட நபருக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் டயாலிசிஸ் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், மாநகர நல அலுவலர் அருண்குமார், உதவி என்ஜினீயர் பிரின்ஸ், சுகாதார அலுவலர் அரிகணேஷ், உதவி ஆணையர் தனசிங், வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்