குழந்தைகள் இல்ல புதிய கட்டிடம் திறப்பு விழா

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் குழந்தைகள் இல்ல புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது

Update: 2022-10-18 18:45 GMT

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான இல்லத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

அமர்சேவா சங்க தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.சங்கரராமன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் போலீஸ் அதிகாரி கார்த்திகேயன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் சக்தி மசாலா நிறுவனர் பி.சி.துரைச்சாமி, சாந்தி துரைசாமி, சொர்ணமணி, சென்னை மாணிக்கம் மகாலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

நிகழ்ச்சியில் ஹரிஹரன், டாக்டர் அருள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், சுரண்டை டாக்டர் முருகையா, சங்கத்தின் பொருளாளர் பட்டம்மாள், ரெப்கோ வங்கி மேலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விஸ்வநாதன் கணேசன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை துறை தலைவர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் கல்யாணம் ஆகியோர் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்