பொதுக்கழிப்பறை கட்டிடம் திறப்பு
மூங்கில்துறைப்பட்டில் பொதுக்கழிப்பறை கட்டிடம் திறப்பு;
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டில் பொதுக்கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில், அதை திறக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமல்லாமல் வாகன ஓட்டிகள் ஊராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டு குழாய் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவுற்றதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கழிப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் மூங்கில்துறைபட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் போதிய கழிப்பறை இல்லாததால் கடும் சிரமப்பட்டு வந்த நிலையில் புதிய கழிப்பறை கட்டிடம் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.