ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட திறப்பு விழா; அமைச்சர் பங்கேற்பு

ஆலங்குளம் அருகே ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட திறப்பு விழா நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.

Update: 2023-08-13 18:45 GMT

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக 15-வது நிதி குழு சுகாதார மானியத் திட்டம் 21-22 மற்றும் தேசிய நகர சுகாதார மையம் 21-22 நிதியின் கீழ் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜா, தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார பணிகள் துணை இயக்குனர் முரளி சங்கர் வரவேற்றார். ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் வாழ்த்தி பேசினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலங்குளம் அருகே நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து பெண்களுக்கு சஞ்சீவி பெட்டகம், பேறுகால ஊட்டசத்து பொருட்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக ஆலங்குளத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள், தரம் உயர்த்தப்பட்ட ஆலங்குளம் அரசு தாலூகா மருத்துமனைக்கு மருத்துவர்கள் மற்றும் கூடுதல் கட்டிடங்கள் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

கட்டிட திறப்பு விழாவில் பொதுப்பணித்துறை கட்டிட கட்டுமான பிரிவு செயற்பொறியாளர் அழகர்சாமி, உதவி செயற்பொறியாளர் சாந்தி பொறியாளர் நிர்மல் சிங், கீழப்பாவூர் யூனியன் தலைவர் காவேரி சீனித்துரை, மாவட்ட நலக்கல்வியாளர் ஆறுமுகம், மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் ராமநாதன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா, தொழிலதிபர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜ், தோற்றா நோய் மருத்துவர் தாண்டாயுதபாணி, உதவி மருத்துவர் குத்தால ராஜ், மருத்துவர்கள் தேவி உத்தமி, சற்குணம், மோஹினா, அர்ச்சனா, சித்ரா, சித்த மருத்துவர்கள் ஜெபநேசம், சரஸ்வதி, தமிழ் முதல்வி, கமர் நிஷா உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பர்வையாளர் கங்காதரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், ராஜ நைனார், ராஜேந்திர குமார், விக்னேஷ்குமார், நிஷாந்த் மணிக்குமார், சிவக்குமார், கலைவானன், சாம் பேனியல் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்