வேளாண் விற்பனை- வணிகத்துறை சார்பில் புதிய அங்காடி திறப்பு விழா
சங்கரன்கோவிலில் வேளாண் விற்பனை- வணிகத்துறை சார்பில் புதிய அங்காடி திறப்பு விழா நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் தென்காசி மாவட்டம் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் திருவேங்கடம் சாலையில் புதிய அங்காடி திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வேளாண் அலுவலர் முத்துக்குமார், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், உதவி வேளாண் அலுவலர் மரகதவல்லி, அமிர்தம் உழவர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தனர்.
இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய அங்காடியை திறந்து வைத்து பொதுமக்களுக்கு விற்பனையை தொடங்கி வைத்தார். அமிர்தம் உழவர் உற்பத்தி சங்கத்தில் உள்ள 500 விவசாயிகளின் விவசாய விளை பொருட்களை பெற்றுக் கொண்டு அதன் மூலம் எண்ணெய், பருப்பு, பிஸ்கட் உள்ள பொருட்கள் தயாரித்து இங்கு விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, இளைஞர் அணி சரவணன், நகர துணை செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.