புதிய ரேஷன் கடை திறப்பு விழா
சேரன்மாதேவியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி யூனியன் மலையான்குளம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாதுடையார்குளத்தில் பகுதி நேர புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், யூனியன் சேர்மன் பூங்கோதை குமார் ஆகியோர் தலைமை தாங்கி, ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தனர். மலையான்குளம் கிராம பஞ்சாயத்து தலைவர் சித்ரா, துணை தலைவர் பலவேசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் சேரன்மாதேவி (கிழக்கு) முத்துப்பாண்டி என்ற பிரபு, சேரன்மாதேவி (மேற்கு) முத்துகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி மூலச்சி சீவலமுத்துகுமார், மாவட்ட துணை அமைப்பாளர்கள் இளைஞர் அணி வேல்முருகன், தகவல் தொழில்நுட்ப அணி பிரேம் ஆனந்த் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கொண்டனர்.