கரூா் மாநகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு

கரூா் மாநகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-04-13 19:12 GMT

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாகவும், பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையிலும் நேற்று கரூர் பஸ் நிலையத்தில் கரூர் மாநகராட்சி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்