நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா
காட்பாடி அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா நடந்தது.
காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சிறப்பு முகாம் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை கோ.சரளா தலைமை தாங்கினார். ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், உதவி தலைமை ஆசிரியை டி.என்.ஷோபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் சுதா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக வேலூர் மாநகராட்சியின் துணை மேயர் எம்.சுனில்குமார் கலந்து கொண்டு நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாமை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாநகராட்சி 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் எல்.சீனிவாசன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சித்ரா லோகநாதன், சித்ரா மகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சதீஷ்குமார், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் விமலா, கல்வி உலகம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எஸ்.எஸ்.சிவவடிவு ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் உதவி திட்ட அலுவலர் கவுசல்யா நன்றி கூறினார்