லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

பாவூர்சத்திரம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது

Update: 2022-07-27 14:16 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் சென்ட்ரல் லயன்ஸ் சங்கத்தின் 18-வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கீழப்பாவூர் குருசாமி கோவில் திருமண மஹாலில் நடைபெற்றது. பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் மூத்த தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கலைச்செல்வன், முருககிங்ஸ்டன், திருமலைக்கொழுந்து, ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் த.அருணாசலம் வரவேற்றார். பொன்.அறிவழகன் தொகுத்து வழங்கினார். முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் கே.ஜி.பிரகாஷ் புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய தலைவராக கே.ஆர்.பி.இளங்கோ, செயலாளராக எஸ்.கே.முருகன், பொருளாளராக எஸ்.பரமசிவன், துணைத்தலைவர்களாக சுரேஷ், ஆனந்த், சிநேகாபாரதி, சங்க நிர்வாகியாக செல்வராஜ், சங்க உறுப்பினர் குழு தலைவராக வெண்ணிநாடார், சேவைத்தலைவராக அருணாச்சலம், சங்க அறக்கட்டளை பொறுப்பாளராக ஞானசெல்வன், சங்க தகவல் தொடர்பு தலைவராக லெட்சுமிசேகர் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்