செங்கோட்டை - சென்னை பொதிகை ரெயில் 20-ம் ஆண்டு தொடக்க விழா

செங்கோட்டை - சென்னை பொதிகை ரெயில் 20-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.;

Update:2023-09-21 00:15 IST

செங்கோட்டை:

செங்கோட்டை- சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் 20-ம் ஆண்டு தொடக்க விழா செங்கோட்டை ரெயில் நிலையத்தில் வர்த்தக சங்கம் சார்பில் நடந்தது. இதையொட்டி செங்கோட்டை வர்த்தக சங்கத்தலைவர் எஸ்.எம்.ரஹீம் கேக் வெட்டியும், பயணிகளுக்கு இனிப்பும் வழங்கினார். பின்னர் ெரயில் என்ஜின் டிரைவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார். நிகழ்ச்சியில் வர்த்தக சங்க செயலாளர் சதீஷ், ரெயில் பயணிகள் நலச்சங்கத்தலைவர் முரளி, செயலாளர் கிருஷ்ணன், மக்கள் தொடர்பு அதிகாரி ராமன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்