விருத்தாசலத்தில் மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
விருத்தாசலத்தில் மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆயியார் மடத்தெருவில் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மருங்கூர் கிராமத்தை சேர்ந்த ராஜலிங்கம் மகன் பிச்சை பிள்ளை (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரே மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த விருத்தாசலம் ராஜவேல் தெருவை சேர்ந்த சுந்தரம் மகன் மகேந்திரன் (38) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.