விளாத்திகுளத்தில்மோட்டார் சைக்கிள் விபத்தில்தொழிலாளி சாவு
விளாத்திகுளத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி இறந்து போனார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் - சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் முத்து பிரகாஷ் (வயது 24). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் சுப்பிரமணியபுரத்தில் இருந்து விளாத்திகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். விளாத்திகுளம் ஆற்றுப்பாலம் மேம்பாலத்தில் சென்றபோது திடீரென்று நிலை தடுமாறி மோட்டார் ைசக்கிளுடன் அவர் கீழே விழுந்தார். இதில் முத்து பிரகாஷ் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்