விளாத்திகுளத்தில் விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணி:கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

விளாத்திகுளத்தில் விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-03 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நபார்டு வங்கி உதவியுடன் கிராமப்புற உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் வேளாண் விளைபொருள் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, நெல்லை விற்பனைக்குழு செயலாளர் எழில், வேளாண்மை உதவி இயக்குநர் கீதா, வேளாண் அலுவலர் பாலமுருகன், ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் விஸ்வநாதன், மாநில தி.மு.க நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வசந்தம் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் அன்புராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்