வானரமுட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

வானரமுட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

Update: 2023-10-26 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள வானரமுட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்று கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அப்பகுதி மாணவர்களுக்கு கிரிக்கெட் பந்து, பேட் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை எம்.எல்.ஏ வழங்கினார். கூட்டத்தில் கழுகுமலை அ.தி.மு.க. நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, கோவில்பட்டியிலுள்ள தனியார் மஹாலில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நகர அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் எம்.எல்.ஏ., அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர், நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், கயத்தாறு அருகே உள்ள அய்யனார்ஊத்து கிராமத்தில் அ.தி.மு.க. பூத்கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆசூர்காளிப்பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்றச் செயலாளர் பூமாரியப்பன், மற்றும் கிளைக் கழக செயலாளர்கள் உள்பட அனைத்து கிளை நிர்வாகிகள் மகளிர் அணியினர் கலந்து கொண்டநர். தொடர்ந்து, மானங்காத்தான், குப்பனாபுரம், உசிலாங்குளம், காப்புலிங்கம்பட்டி, ஆசூர், சவலாப்பேரி, உள்பட பத்து கிராமங்களில் பூத்கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்