உடன்குடி பேரூராட்சி யில்சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பு:அதிகாரி எச்சரிக்கை

உடன்குடி பேரூராட்சி யில் அதிகரித்து வரும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-01-29 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி பேருராட்சி செயல் அலுவலர் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உடன்குடி பஜார் நான்கு சந்திப்பு, பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் மெயின் ரோட்டில் ஆக்கிரமித்து சாலையோர கடைகள் அதிகரித்து வருகின்றன. மேலும் இந்த பகுதிகள் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் மாறி வருகிறது, இதனால் நகரில் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன், நடந்து செல்லும் பொதுமக்களும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன. எனவே, தாங்களாகவே, ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிக் கொள்ள வேண்டும். மேலும், சாலையோரங்களில் உள்ள கடைகளுக்குள் ஏராளமான காலியிடங்கள் இருந்தாலும், விற்பனை செய்யும் பொருட்களை வெளியில் வைத்து ஆக்கிரமிப்பு செய்து, போக்குவரத்துக்கு இடையூறு செய்து வருகின்றனர். இந்த சாலையோர ஆக்கிரமிப்புகளும், ஆக்கிரமிப்பு கடைகளும் போலீஸ் துணையுடன் அப்புறப்படுத்தப்படும். அதற்கான முழு செலவும் ஆக்கிரமிப்பாளர்களிடம் வசூலிக்கப்படும், என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்