உடன்குடி வட்டாரத்தில் பனை விவசாயிகளுக்கு அரசு மானிய உதவி

உடன்குடி வட்டாரத்தில் பனை விவசாயிகளுக்கு அரசு மானிய உதவி வழங்கப்படுகிறது.

Update: 2022-10-18 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஆனந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உடன்குடி வட்டாரத்திலுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் அதிகபட்சமாக 50 பனை விதைகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். சிறந்த பனையேறும் எந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கு விருது, 160 சதுர அடியில் பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், 160 சதுர அடியில் நிரந்தர கட்டமைப்பு அமைக்க 50 சதவீதம் பின்னேற்பு மானியமாக ஒரு ரூ.50ஆயிரம் வழங்கப்படும். பனைசார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கான உபகரணங்களுக்கு 50சதவீதம் மானியமாக ரூ.4ஆயிரம் வழங்கப்படுகிறது. பனை ஏறும் விவசாயிகளுக்கு பனைமரம் ஏறுவதற்கும், அறுவடை செய்வதற்கும் உகந்த உபகரணங்கள் 75சதவீதம் மானியமாக ரூ.4,500 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பனை விவசாயிகள் உடன்குடியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அல்லது இதற்கான வலைதளத்தில் விவசாயிகள் தாங்களாகவே பதிவு செய்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்