தூத்துக்குடியில் உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடியில் உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தூத்துக்குடி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடம் நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் பெர்னார்டு ஆல்பர்ட் ராஜ்குமார், டாக்டர்கள் சக்திவேல், அஜய் சந்தோஷ் டேவிட் மற்றும் செவிலியர் கல்லூரி மாணவிகள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.