தூத்துக்குடியில் பூஜை பொருட்கள் விற்பனை கடை எரிந்து சேதம்

தூத்துக்குடியில் பூஜை பொருட்கள் விற்பனை கடை எரிந்து சேதம் அடைந்தது.

Update: 2022-11-01 18:45 GMT

தூத்துக்குடி சிவன் கோவில் அருகே பெரியசாமி என்பவர் பூஜை பொருட்கள் மற்றும் கொலு பொம்மைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றாராம். திடீரென நள்ளிரவில் கடை தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் கடையில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பூஜை பொருட்கள் கொலு பொம்மைகள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் கடையில் தீவைத்து செல்வது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்