தூத்துக்குடியில்பல்கலைக்கழக மகளிர் கல்லூரி கபடி போட்டி தொடக்கம்
தூத்துக்குடியில் பல்கலைக்கழக மகளிர் கல்லூரி கபடி போட்டி திங்கட்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டி நேற்று தொடங்கியது.
கபடி போட்டி
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டி தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் அஜெலி பெர்னாண்டோ தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஷிபானா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஓய்வூ பெற்ற விமானப்படை குருப் கேப்டன் என்.தினகரன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
36 அணிகள்
இந்த போட்டிகளில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 36 கல்லூரிகளை சேர்ந்த மகளிர் கபடி அணி பங்கேற்று உள்ளன. இந்த போட்டிகள் நாக் அவுட் முறையில் நடந்தது. இதன் இறுதிப் போட்டிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு வெற்றிக் கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பல்கலைக்கழகங்கள் இடையே நடைபெறும் கபடி போட்டியில் விளையாட தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.