தூத்துக்குடியில் வாலிபர் தூக்கு போட்டு சாவு

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-10-21 18:45 GMT

தூத்துக்குடி கீழசண்முகபுரத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். தி.மு.க. பிரமுகர். இவருடைய மனைவி பேபி ஏஞ்சலின் தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவர்களது மகன் கதிர்வேல் (வயது 25). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இவர் நேற்று காலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிர்வேல் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்