தூத்துக்குடியில்வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-28 18:45 GMT

தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்தவர் வினோத் (வயது 28). இவர், தனது மனைவியின் நகையை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அடகு வைத்தாராம். அதனை திருப்பி தராமல் இருந்தாராம். இதில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால், வினோத்தின் மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாராம். இதில் மனம் உடைந்த வினோத் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்